மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள்
அரசு அறிவித்த பின்னர் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தவர்களுக்கு மனுவின் நிலை குறித்து நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) முதல் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, அரசிடம் இருந்து குறுஞ்செய்தி வரவில்லை என்றால் அந்த மனு பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள http://kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து சரிபார்த்துக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், தங்களது விண்ணப்பத்தின் நிலை என்ன? ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்? தனியார் வங்கி கணக்கு வைத்திருந்தால் பணம் செலுத்தப்படுமா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அரசு இணையதளத்தில் பொதுமக்கள் முன்வைத்துள்ளனர். அதற்கு அரசு அளித்துள்ள விளக்கத்தின்படி, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க அரசால் அறிவிக்கப்படும் தேதியில் இருந்து தங்கள் மனுக்களை இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும், தனியார் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கும் உரிமைத்தொகை அந்த வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Those who have not applied for the Magaleer Urimai Thittam can apply at e-service centers after notification by the government
From yesterday (Monday) SMS is being sent to those who have applied for entitlements under the Artist Women's Rights Scheme regarding the status of their petitions. Accordingly, if no text message is received from the government, the petition is under consideration. To know the details of this petition, the government has announced that you can enter and verify the Aadhaar number on the website http://kmut.tn.gov.in.
At this stage, what is the status of your application? When can those who have not already applied apply? Will the payment be made if I have a private bank account? Various questions have been submitted by the public on the government website including: According to the explanation given by the government, those who have not applied under the artist women's rights scheme can apply their petitions through e-service centers from the date notified by the government to apply, and those who have accounts in private banks will also be informed that the entitlement amount will be sent to that bank account.
No comments:
Post a Comment