வங்கியில் வேலை
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) சார்பில் 2 ஆயிரம் புரொபஷெனரி ஆபீசர் (பி.ஓ) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மருத்துவம், என்ஜினீயரிங், ஆடிட்டிங் (சி.ஏ) படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 1-4-2023 அன்றைய தேதிப்படி 21 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
1-4-2002-க்கு பின்பாகவோ, 2-4-1993-க்கு முன்பாகவோ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது.
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-9-2023. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://sbi.co.in/web/careers என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment