அசாம் ரைபிள்ஸ் சார்பில் டெக்னிக்கல் மற்றும் டிரேட்ஸ்மேன் பிரிவில் 161 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஐ.டி.ஐ., 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பி.இ, பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 23 வயது, 25 வயது, 28, 30 வயது என பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. எழுத்து தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 19-11-2023.
விண்ணப்ப நடைமுறை பற்றிய மேலும் விரிவான விவரங்களை https://www.assamrifles.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment