2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜனவரியில் போட்டித்தேர்வு
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
Photo by Max Fischer: https://www.pexels.com/photo/students-sitting-in-the-classroom-5212326/
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பணிகளில், 2 ஆயிரத்து 222 காலியிடங்கள் உள்ளன.
இதற்கான நேரடி நியமன போட்டித்தேர்வு, அடுத்த ஆண்டு ஜனவரி 7-ந் தேதி நடைபெறுகிறது.
பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் இந்த போட்டித்தேர்வுக்கு வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆசிரியர் பணிக்கான டெட் 2-ம் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம். போட்டித்தேர்வில் ‘பகுதி அ' பிரிவில் 50 மதிப்பெண்களுக்கு தமிழ்மொழி கட்டாயத்தேர்வு நடத்தப்படும்.
இதில், குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் பெற வேண்டும். ‘பகுதி ஆ' பிரிவில் 150 மதிப்பெண்களுக்கு பணியிடத்துக்கு ஏற்ற பாடம் இடம் பெறும். இதில், பொதுப்பிரிவினர் குறைந்தபட்சம் 60 மதிப்பெண்களும், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி.பிரிவினர் குறைந்த பட்சம் 45 மதிப்பெண்களும் பெற வேண்டும். தேர்ச்சி பெறுபவர்களில், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment