மாணவர்களின் கற்றல் திறனை அறிய மாநில கல்வி சாதனை ஆய்வு அடுத்த மாதம் 3-ந் தேதி நடக்கிறது - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, October 7, 2023

மாணவர்களின் கற்றல் திறனை அறிய மாநில கல்வி சாதனை ஆய்வு அடுத்த மாதம் 3-ந் தேதி நடக்கிறது

மாணவர்களின் கற்றல் திறனை அறிய மாநில கல்வி சாதனை ஆய்வு அடுத்த மாதம் 3-ந் தேதி நடக்கிறது 


 மாணவர்களின் கற்றல் திறனை அறிவதற்காக தேசிய சாதனை ஆய்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. அதேபோல், தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் மாநில கல்வி சாதனை ஆய்வு-2023 (எஸ்.இ.ஏ.எஸ்.)-ஐ அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி நடத்த திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 3, 6 மற்றும் 9-ம் வகுப்பு இருக்கும் பள்ளிகள் மற்றும் அதில் படிக்கும் மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை சோதிக்க இருக்கிறது. 

 இதற்காக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்களாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வரையும் நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இதற்கென்று ஒரு அறையை ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. 

இதுமட்டுமல்லாமல், 30 ஆயிரம் கள ஆய்வாளர்களை அடையாளம் கண்டு அவர்கள் மூலம் இந்த மாநில கல்வி சாதனை ஆய்வை மேற்கொள்ள கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. அவ்வாறு நியமிக்கப்படும் கள ஆய்வாளர்கள், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர்கள், பி.எட்., எம்.எட் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகளாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

 அதேபோல், ஒவ்வொரு வட்டார அளவில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அந்தவகையில், 20 பள்ளிகளுக்கு ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளர் என மொத்தம் 1,356 வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment