ரயில்வே ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, October 25, 2023

ரயில்வே ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

ரயில்வே ஊழியர்களின் அகவிலைப்படியை தற்போது இருக்கும் 42 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. 

பிரதமர் மோடி தலைமையில் கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒன்றிய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4% உயர்வு, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் உள்பட ரூ. 15,000 கோடி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 5 நாட்களுக்கு பிறகு, 7வது ஊதிய கமிஷன் பரிந்துரையின்படி, ரயில்வே ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. 

 இது தொடர்பாக இந்திய ரயில்வே பொது மேலாளர்கள் மற்றும் உற்பத்தி பிரிவு தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில், ‘ரயில்வே ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது நடைமுறையில் உள்ள 42 சதவீதத்தில் இருந்து 4 % உயர்த்தி, 46 சதவீதமாக வழங்கப்படுவதாக ரயில்வே வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இது ஜூலை 1, 2023 முதல் அடிப்படை ஊதியத்தின் கீழ் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment