58 வயது வரை ஆசிரியர் ஆகலாம் உச்ச வயது வரம்பு உயர்வு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, October 24, 2023

58 வயது வரை ஆசிரியர் ஆகலாம் உச்ச வயது வரம்பு உயர்வு


பள்ளி கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்துக்கான உச்சவயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 வயது என்றும், இதர பிரிவினருக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் பொதுப்பிரிவினருக்கு 42 வயது என்றும், இதர பிரிவினருக்கு 47 வயது என்றும் உச்சவயது வரம்பு கடந்த ஜனவரி மாதம் உயர்த்தப்பட்டது. 

 இதற்கிடையில் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் ஆசிரியர் சங்க அமைப்பினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிந்துரையின்பேரில், தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் எழுதிய கடிதத்தில் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்துக்கான உச்சவயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 வயது என்றும், இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் நிர்ணயித்து அரசாணை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த கோரிக்கையை ஏற்று ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்துக்கான உச்சவயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 வயது என்றும், இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் நிர்ணயித்து தமிழக அரசின் செயலாளர் ஜெ.குமரகுருபரன் அரசாணை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment