வாட்ஸ்-அப்பின் புதிய அம்சங்கள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, October 11, 2023

வாட்ஸ்-அப்பின் புதிய அம்சங்கள்

வாட்ஸ்-அப்பின் புதிய அம்சங்கள் 
 வாட்ஸ்-அப் மிகவும் பிரபலமான உரையாடல் பயன்பாடாகும். இதனை 2 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். கிராஸ்-பிளாட்ஃபார்ம் இணக்கத்தன்மை மற்றும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் ஆகியவற்றின் கலவையானது பயனர்களிடையே, குறிப்பாக இந்தியர்களிடையே இது மிகவும் பிரபலமாக இருக்க உதவுகிறது. கடந்த சில மாதங்களில், மெட்டாவுக்குச் சொந்தமான இயங்குதளமானது பல பெரிய மற்றும் சிறிய பயனுள்ள அம்சங்களை வாட்ஸ்-அப் பெற்றுள்ளது. 

இந்த செயலியை அதிகம் பயன்படுத்த அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய அம்சங்கள் இங்கே உள்ளன. இந்த ஐந்து அம்சங்கள் வாட்ஸ்-அப்பை ஒரு சிறந்த உடனடி உரையாடல் தளமாக மாற்றுகின்றன. உயர் வரையறை புகைப்படங்களை அனுப்புதல் மெட்டா இறுதியாக ஒரு விருப்பத்தை இயக்கியுள்ளது, இது பயனர்களின் உயர்-வரையறை (HD) படங்களை நேரடியாக வாட்ஸ்-அப்பில் அனுப்ப அனுமதிக்கிறது. கூடவே இது படத்தின் தரம் மற்றும் விவரங்களைப் பாதுகாக்கிறது. Android மற்றும் iOS சாதனங்களில் இருந்து பயனர்கள் இப்போது வாட்ஸ்-அப்பில் HD படத்தை அனுப்பலாம். 

இதேபோல், HD வீடியோ பகிர்வு அம்சத்தை வாட்ஸ்-அப்பில் செயல்படுத்த மெட்டாவும் முயன்று வருவதாக கூறப்படுகிறது. உடனடி வீடியோ செய்திகள் வாட்ஸ்-அப்பில் ஒரு சிறிய வீடியோ மூலம் செய்திக்கு நீங்கள் பதிலளிக்கலாம். இந்த புத்தம் புதிய அம்சம் பயனர்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உரையாடும் போது குறுகிய வீடியோக்களை அனுப்ப அனுமதிக்கிறத. இது மெட்டாவின் வாட்ஸ்-அப் அரட்டை அனுபவத்திற்கு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. தெரியாத அழைப்பாளர்களை முடக்குதல் வாட்ஸ்-அப்பில் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்புகளைப் பெறுவதில் சோர்வடைபவர்களுக்கு, தனியுரிமையை மேம்படுத்த மெட்டாவுக்குச் சொந்தமான மெசேஜிங் இயங்குதளமானது புதிய அம்சத்தை சேர்த்துள்ளது. இது தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை தானாகவே முடக்க அனுமதிக்கிறது. 

அந்நியர்களிடமிருந்து கோரப்படாத ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளிலிருந்து விலகி இருக்கவும் அறியப்படாத அழைப்புகளை முடக்கும் விருப்பத்தையும் பயனர்கள் இப்போது இயக்கலாம் செய்திகளைத் திருத்தம் செய்தல் அவசரமாக வாட்ஸ்-அப்பில் ஒரு செய்தியை அனுப்பியுள்ளீர்கள், அதை மீண்டும் திருத்த விரும்புகிறீர்களா? நீங்கள் இப்போது வாட்ஸ்-அப்பில் இதைச் செய்யலாம்.அனுப்பிய செய்தியைத் திருத்துவதற்கு இப்போது வாட்ஸ்-அப் இயங்குதளம் பயனர்களை அனுமதிக்கிறது. 

இருப்பினும், ஒருவர் 15 நிமிடங்களுக்குள் ஒரு உரைச் செய்தியை மட்டுமே திருத்த முடியும், மேலும் ஒரு செய்தியைத் திருத்தும்போது, ​​அது பெறுநருக்குத் தெரிவிக்கப்படும். பாதுகாப்பான தனிப்பட்டஅரட்டைகள் வாட்ஸ்-அபு இப்போது அரட்டை பாதுகாப்பை ஆதரிக்கிறது. பயனர்கள் இப்போது குறிப்பிட்ட அரட்டைகளை பூட்ட முடியும். அந்த உரையாடலை ஒரு அங்கீகாரத்துடன் மட்டுமே அணுக முடியும். குறிப்பாக மற்றவர்களுடன் தங்கள் ஸ்மார்ட்போனை பகிர்ந்து கொள்ள வேண்டியவர்களுக்கு இது கூடுதல் தனியுரிமையை சேர்க்கிறது.

No comments:

Post a Comment