மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மறுசீரமைப்பு அரசாணை வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, October 28, 2023

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மறுசீரமைப்பு அரசாணை வெளியீடு

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மறுசீரமைப்பு அரசாணை வெளியீடு 
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் கீழ் வரும் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்து இருந்தது. அதன் அடிப்படையில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை மறுசீரமைக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தார். மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர் வைத்த கோரிக்கையை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களை மறுசீரமைக்க சில திருத்தங்களை முன்மொழிந்து இருக்கிறது. 

அதன்படி, ஒரு முதல்வர், ஒரு துணை முதல்வர், மூத்த விரிவுரையாளர் 5, 10 விரிவுரையாளர், ஒரு நூலகர் என ஒரு மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு 18 பேரை நியமிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் 20 மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு 360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதேபோல், தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப மதிப்பீட்டு பிரிவு, கல்வி தொலைக்காட்சி, மாநில வளமையம் ஆகியவற்றையும் மறுசீரமைக்க வேண்டும். இந்த மறுசீரமைப்புக்கான முன்மொழிவு, சரணடைய வேண்டிய பதவிகளுக்கு பதிலாக புதிய பணியிடங்களை உருவாக்குவது ஆகியவற்றால் அரசுக்கு ரூ.49 லட்சத்து 5 ஆயிரத்து 288 மிச்சம் ஆகும் என மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர் தெரிவித்துள்ளார். 

மேலும் கல்வி தொலைக்காட்சியில் இணைக்கப்பட உள்ள பணியிடங்களில் தலைமை செயல் அதிகாரி தவிர மற்ற 45 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் வெளியில் இருந்து ஆட்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். இதற்கான ஒட்டுமொத்த செலவினமாக ரூ.3 கோடியே 50 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment