மத்திய மின்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எஸ்.ஜே.வி.என். நிறுவனத்தில் பீல்டு என்ஜினீயர், பீல்டு ஆபீசர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 153 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பீல்டு என்ஜினீயர் பணிக்கு என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும்.
பீல்டு ஆபீசர் பணிக்கு சி.ஏ., சி.எம்.ஏ., எம்.பி.ஏ. படித்தவர்களாக இருக்க வேண்டும்.
18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-10-2023.
மேலும் விரிவான விவரங்களை https://sjvn.nic.in/ என்ற இணையபக்கத்தில் பார்வையிடலாம்.
No comments:
Post a Comment