பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணி - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, October 7, 2023

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணி

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணி 
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாப், இயக்குனர், சிஸ்டம் மானேஜர், மக்கள் தொடர்பு அதிகாரி, உதவி பதிவாளர், உதவி தோட்டக்கலை நிபுணர், மானேஜர், மூத்த தொழில்நுட்ப உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டெக்னீஷியன், இளநிலை உதவியாளர், கேமராமேன், ஆராய்ச்சி உதவியாளர் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் (கற்றல் அல்லாத) 142 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியின் தகுதிக்கேற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, முதுகலைப்பட்டப்படிப்பு கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணி அனுபவமும் கோரப்பட்டுள்ளது. அதேபோல் வயது வரம்பும் பணியின் தன்மைக்கேற்ப 25 வயது முதல் 55 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. எழுத்துத்தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியாக விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். பின்பு அதனை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் துணைப்பதிவாளர், ஆட்சேர்ப்பு பிரிவு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், ஆர்.வி.நகர், காலாப்பேட்டை, புதுச்சேரி-605014 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-10-2023. விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை https://recruitment.pondiuni.edu.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment