மன்ற செயல்பாடுகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளின் விவரங்களை ‘எமிஸ்' தளத்தில் பதிவேற்ற வேண்டும் கல்வித்துறை உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, October 8, 2023

மன்ற செயல்பாடுகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளின் விவரங்களை ‘எமிஸ்' தளத்தில் பதிவேற்ற வேண்டும் கல்வித்துறை உத்தரவு

மன்ற செயல்பாடுகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளின் விவரங்களை ‘எமிஸ்' தளத்தில் பதிவேற்ற வேண்டும் கல்வித்துறை உத்தரவு 

அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற, வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளின் விவரங்களை கல்வியியல் மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) தளத்தில் வருகிற 10-ந் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

அதேபோல், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பள்ளி மற்றும் வட்டார அளவில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கும், வெற்றி பெறும் மாணவர்களின் விவரங்களையும் குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவேற்றம் செய்திட வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட நாட்களில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றால், பிறகு அதை பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்படும். 

பள்ளி அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்று எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் மட்டுமே வட்டார அளவில் பங்கேற்க வேண்டும். அவர்களை தவிர மற்றவர்கள் வட்டார அளவில் பங்கேற்கக்கூடாது என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே பள்ளி அளவில் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் விவரங்களில் பிழைகள் இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment