ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு
ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கடந்த ஆகஸ்டு மாதம் 3 மற்றும் 4-ந் தேதிகளில் இணையவழியில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த பொதுமாறுதல் கலந்தாய்வு அப்போது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் 31-ந் தேதி நடைபெறும் என ஆதிதிராவிடர் நலத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆனந்த், அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் 31-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களில் கலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். கலந்தாய்வு நடைபெறும்போது மின்தடை ஏற்படாதவாறு மாவட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். குறைபாடுகள் ஏதும் இல்லாமல் செவ்வனே கலந்தாய்வு நடத்தவேண்டும். குறைபாடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அது தொடர்புடைய அனைத்து அலுவலர்கள் மீதும் தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment