இளங்கலை (பி.எஸ்சி) படித்தவர்கள் மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு விமான நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-11-2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, October 28, 2023

இளங்கலை (பி.எஸ்சி) படித்தவர்கள் மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு விமான நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-11-2023

விமான நிறுவனத்தில் வேலை 

 இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ) மூலம் எக்சிகியூட்டிவ், உதவியாளர், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி என 496 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 30-11-2023 அன்றைய தேதிப்படி 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. 

 இயற்பியல், கணிதம் போன்ற பிரிவுகளில் இளங்கலை (பி.எஸ்சி) படித்தவர்கள் மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பள்ளிப்படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-11-2023. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://www.aai.aero/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment