GATE மூலம் NPCILல் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆள் சேர்ப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, October 10, 2023

GATE மூலம் NPCILல் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆள் சேர்ப்பு

GATE மூலம் NPCILல் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆள் சேர்ப்பு 

நியூக்ளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட்-ஆனது, இந்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் உள்ள ஒரு முதன்மையான மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இந்தியாவில் அணுஉலைக்கான இடம் தேர்ந்தெடுத்தல், வடிவமைத்தல், கட்டுதல், இயந்திரங்களை ஒருங்கிணைத்தல், இயக்குதல், பராமரித்தல், புதுப்பித்தல், நவீனமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல், அணுஉலை ஆயுட்காலத்தை அதிகரித்தல், கழிவு மேலாண்மை மற்றும் ஆயுட்காலம் முடித்த அணுஉலைகளை அகற்றுதல் உள்ளிட்ட அணு தொழில்நுட்பத்தின் அனைத்து துறைகளிலும் விரிவான செயல்திறனை ஒரே குடையின் கீழ் தன்னகத்தே கொண்டுள்ளது இந்நிறுவனம். 

மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமெண்ட்டேஷன் மற்றும் சிவில் துறைகளில் எக்ஸிகுட்டிவ் டிரெயினிகளாக (ET-2024) பொறியியல் பட்டதாரிகள் ஆள்சேர்ப்புக்கு NPCIL திட்டமிட்டுள்ளது. Not wh * NPCIL SERVICE OF T na விருப்பமுள்ள அபேட்சகர்கள் NPCILல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நேரத்தில் மேலே குறிப்பிட்ட எந்த ஒரு துறைகளிலும் 2022/2023/2024 வருடத்திற்காக செல்லுபடியான GATE மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்காக அபேட்சகர்களை குறுகிய பட்டியலிடல் GATE மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். விரிவான விளம்பரம் GATE-2024 முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து உத்தேசமாக 10 நாட்களுக்குள் NPCIL இணையதளம் www.npcilcareers.co.in &_www.npcil.nic.in -ல் உள்ளன. அபேட்சகர்கள் GATE 2024 பற்றிய விரிவான தகவலுக்கு IISc மற்றும் IIT களின் எந்த ஒரு GATE மண்டல இணையதளம் அல்லது https://gate2024.iisc.ac.in ஐ பார்க்கவும். E எந்த ஒரு மேல் தகவல்கள் / திருத்தம் / பிற்சேர்க்கை மேலே குறிப்பிட்ட NPCIL இணையதளங்களில் மட்டுமே அப்லோடு செய்யப்படும். NPCIL ஆனது பாலின சமநிலையை கொண்ட பணியாளர்களை வைத்திருக்க பாடுபடுகிறது மற்றும் பெண் அபேட்சகர்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். 


No comments:

Post a Comment