பள்ளிக்கல்வித்துறை கலைத்திருவிழா (Kalaithiruvizha) (2023-2024) போட்டிகள்-நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, October 3, 2023

பள்ளிக்கல்வித்துறை கலைத்திருவிழா (Kalaithiruvizha) (2023-2024) போட்டிகள்-நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கீழ்கண்ட அறிவிப்பினை அறிவித்துள்ளார். "மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி. வட்டாரம். மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும்". இதனை தொடர்ந்து 2022-23ம் ஆண்டில் 6-12 வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கலையரசன். கலையரசி விருதுகளும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. பள்ளி அளவில் சுமார் 28 லட்சம் மாணவர்களும். வட்டார அளவில் 6 லட்சம் மாணவர்களும், மாவட்ட அளவில் 1.9 லட்சம் மாணவர்களும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர். மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி. மாணவர்களின் கலைத் திறன்ளை வெளிகொணரும் விதமாகவும். பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும் கலை அரங்கம் செயல்பாடுகள் மூலம் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment