ஜிப்மரில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி:16.11.2023! - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, November 4, 2023

ஜிப்மரில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி:16.11.2023!

புதுச்சேரி, ஏனாமில் உள்ள ஜிப்மரில் ஸ்பெஷலிஸ்ட், ஜெனரல் டியூட்டி மெடிக்கல் ஆபீசர், சைல்டு சைக்காலஜிஸ்ட், நர்சிங் ஆபீசர், எக்ஸ்ரே டெக்னீஷியன், ஜூனியர் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், ஜூனியர் பிசியோதெரபிஸ்ட், மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜிஸ்ட், பார்மசிஸ்ட், ஸ்டெனோகிராபர் கிரேடு உள்ளிட்ட பிரிவுகளில் 97 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ்., பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ, பார்மஸி, ஸ்டெனோகிராபி, டைப்பிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். வயது வரம்பு, கல்வி தகுதி, விண்ணப்ப நடைமுறை பற்றிய விவரங்களை https://jipmer.edu.in/announcement/jobs என்ற இணையப்பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி:16.11.2023.

No comments:

Post a Comment