22 மொழிகளிலும் (ஐஏஎஸ், ஐபிஎஸ்) குடிமைப் பணித் தேர்வு: உயர்நீதிமன்றத்தில் மனு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, November 27, 2023

22 மொழிகளிலும் (ஐஏஎஸ், ஐபிஎஸ்) குடிமைப் பணித் தேர்வு: உயர்நீதிமன்றத்தில் மனு

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணித் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப் பட்டது. 


போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்வி கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

இது ஹிந்தி மொழி தெரிந்தவர்களுக்கு சாதகமாக இருப்பதா கவும், மாநில மொழிகளில் புலமைப் பெற்றவர்களுக்கு பாரபட்ச மாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்துவதால் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் கூறியுள்ள மனுதாரர், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்ட வணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள் ளார். இந்த மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி கங்காபுர் வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, டிசம் பர் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. 

No comments:

Post a Comment