தமிழக வேளாண்மை துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு! கடைசிநாள்: 24.12.2023! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, November 29, 2023

தமிழக வேளாண்மை துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு! கடைசிநாள்: 24.12.2023!

வேளாண்மை துறையில் சேர விருப்பமா தமிழக வேளாண்மை துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

 காலியிடம்: உதவி வேளாண்மை அதிகாரி 84, உதவி தோட்டக்கலை அதிகாரி 179 என மொத்தம் 263 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: வேளாண்மை அதிகாரி பதவிக்கு பிளஸ் 2, இரண்டாண்டு டிப்ளமோ அக்ரிகல்சர், தோட்டக்கலை அதிகாரி பதவிக்கு பிளஸ் 2, இரண்டாண்டு டிப்ளமோ ஹார்டி கல்சர் முடித்திருக்க வேண்டும். 

வயது: 1.7.2024 அடிப்படையில் பொது பிரிவினர் 18-32, மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை. 
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

கட்டணம்: தேர்வுக்கட்டணம் ரூ.100. 

பதிவுக்கட்டணம் ரூ. 150 

கடைசிநாள்: 24.12.2023 விபரங்களுக்கு: tnpsc.gov.in


No comments:

Post a Comment