மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.ஐ.டி. இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, ஜே.இ.இ. முதன்மை மற்றும் ஜே.இ.இ. அட்வான்ஸ் என 2 தேர்வுகளாக நடைபெறும்.
இந்த நிலையில், 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு, வரும் 2024-ம் ஆண்டு, ஜனவரி 24-ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமை வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜே.இ.இ முதன்மை தேர்வு 2024-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 1-ந்தேதி வரை நடைபெறும். இதற்கு, விருப்பமுள்ள மாணவர்கள் https://jeemain.nta.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வருகிற 30-ந்தேதி இரவு 9 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். முதன்மை தேர்வு முடிவுகள் பிப்ரவரி 12-ந்தேதி வெளியிடப்படும்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி உள்பட 13 மொழிகளில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருந்தால், மாணவர்கள் 011-40759000 அல்லது 011-69227700 என்ற எண்ணுக்கோ, jeemain@nta.ac.in என்ற இ-மெயில் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment