ஐ.சி.எம்.ஆரில் வேலை: சென்னை, புதுச்சேரியில் பணிவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-11-2023. - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, November 4, 2023

ஐ.சி.எம்.ஆரில் வேலை: சென்னை, புதுச்சேரியில் பணிவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-11-2023.

ஐ.சி.எம்.ஆரில் வேலை: சென்னை, புதுச்சேரியில் பணிவாய்ப்பு 
 காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) சார்பில் சென்னையில் இயங்கும் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்.ஐ.ஆர்.டி) தொழில்நுட்ப உதவியாளர் (60), ஆய்வக உதவியாளர் (13) என 73 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைசார்ந்த டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆய்வக உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் துறைசார்ந்த படிப்பும், ஓராண்டு ஆய்வக பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆய்வக உதவியாளர் பணிக்கு 18 முதல் 25 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-11-2023. 

  ஆராய்ச்சி மையத்தில் பணி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) கட்டுப்பாட்டில் புதுச்சேரியில் இயங்கும் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீஷியன், லேபரட்டரி அட்டெண்டன்ட் என 71 பணி இடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-11-2023. மேலும் விரிவான விவரங்களை https://joinicmr.in/ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 

  தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணியிடம் சென்னையில் செயல்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆய்வக உதவியாளர் என 47 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என துறை சார்ந்த படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 30 வயதும், ஆய்வக உதவியாளர் பணிக்கு 25 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-11-2023. மேலும் விரிவான விவரங்களை அறிய https://nie.icmr.org.in/ என்ற இணையப்பக்கத்தை சொடுக்கலாம்.

No comments:

Post a Comment