குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, November 26, 2023

குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்

உடல் வலி மற்றும் சோர்வாக இருக்கும்போது வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது இத மாகவும், புத்துணர்வாகவும் இருக்கும். குளிர்காலங் களில், குளிர்ந்த சூழலை சமாளிக்க பலரும் வெந் நீரில் குளிக்கவே விரும்புவார்கள். ஆனால், சூடான தண்ணீரில் குளிப்பதால் உடலின் மந்தநிலை அதிகரிக் கவே செய்யும். குளிர்காலங்களில் உடலையும், சுறுசுறுப்பாகவும், மனதையும், ஆரோக்கியமாகவும், புத்துணர்வாகவும் வைத்துக்கொள்ள குளிர்ந்த நீரில் குளிப்பதே சிறந்த தீர்வாகும். குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும். அது தொடர்பான தகவல்கள் இங்கே... 

1. குளிர்காலத்தில் குளிர்ந்த தண்ணீரில் குளிக்கும் போது அதிகப்படியான ஆக்சிஜனை சுவாசிப்போம். அதனால் மூளை சுறுசுறுப்பாகி, நாள் முழுவதும் உடலையும், மனதையும் புத்துணர்வோடு வைத்திருக்கச் செய்யும். குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது ரத்தக்குழாய் களை வலிமைப்படுத்தி, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். 

2. குளிர்காலத்தில், சருமம் மற்றும் தலைமுடி வறட்சி அடையும். அத்தகைய நிலையில், வெந்நீரில் குளிக்கும்போது சருமம் மேலும் வறண்டு, எரிச்சல் மற்றும் வெடிப்புகள் ஏற்பட வழிவகுக்கும். குளிர்ந்த தண்ணீரில் குளிக்கும்போது சருமம் பளபளப்பாகவும், தலைமுடி ஆரோக்கியமாகவும் இருக்கும். குளிர்ந்த தண்ணீர் உச்சந்தலையில் உள்ள சருமத்துளைகளை இறுக்கம் அடையச் செய்து, அழுக்கு உள்ளே செல் வதைத் தடுக்கும். 

3. குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது, இயற்கை யாகவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்த்தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும். குளிர்ந்த நீரில் குளிக்கும்போது உடல் தன்னைத் தானே சூடேற்ற முயற்சிக்கும். அதன் விளைவாக வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கும். இதன் மூலம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். 

4. குளிர்காலத்தில் தசைகளில் ஏற்படும் காயங்கள் எளிதில் குணமாகாது. இந்த நிலையில் வெந்நீரில் குளிக்கும்போது, காயங்களின் வீரியமும், வலியும் அதிகரிக்கக்கூடும். குளிர்ந்த நீரில் குளிப்பதால் தசை வலி குறையும். 

5. குளிர்காலத்தில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது, உடலையும், மனதையும் தன்னிச்சையாகவே ஓய்வு நிலைக்கு கொண்டு செல்லும். இது மன அழுத்தத் தைக் குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

6. குளிர் காலத்தில் சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அவர்கள் மிதமான குளிர்ந்த நீரில் தொடர்ந்து குளித்து வந்தால் சுவாசம் சீராகும். 

7. வெந்நீர் குளியலுக்குப் பின்னர் குளிர்ந்த சூழ லுக்குச் செல்வது, உடலை வெப்ப அதிர்ச்சிக்கு உள் ளாக்கும். இது இதயத்திற்கு அழுத்தம் கொடுப்பதுடன், ரத்த ஓட்டத்தின் சீரான நிலையில் இடையூறு விளை விக்கும். குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் ரத்த ஓட்டம் மேம்படுவதோடு, உடலின் உள் உறுப்புகள் சீராக இயங்குவதற்கும் உதவும். 

8. குளிர்ந்த நீரில் குளிப்பது தசைகளில் இறுக்கத்தை உண்டாக்கி, உடல் தோற்றத்தை மேம்படுத்தும். 

குறிப்பு: சைனஸ் மற்றும் ஒருசில உடல்நலக் கோளாறுகளுக்கு சிகிச்சை மேற்கொள்பவர்கள், குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதற்கு முன்பு மருத் துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமானது.

No comments:

Post a Comment