குழந்தைகளின் மனிதவள திறமை! பெற்றோர் அறிய வேண்டியது என்ன? - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, November 2, 2023

குழந்தைகளின் மனிதவள திறமை! பெற்றோர் அறிய வேண்டியது என்ன?

குழந்தைகளின் மனிதவள திறமை! பெற்றோர் அறிய வேண்டியது என்ன?
முன்பெல்லாம் கூட்டு குடும்பங்களில்தான் குழந்தைகள் வாழ்ந்தனர். இன்றைக்கு குழந்தைகள் படிக்கும்போதே, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் உறவுகளின் பெயர்களையும் மிகவும் குறைவாகவே தெரிந்து கொள்ளும் சூழல் நிலவுகிறது. ஒரு குழந்தையின் தாய், தந்தை இருவருமே பணிக்கு செல்பவர்களாக இருக்கும்பட்சத்தில், அந்த குழந்தை பெரும்பாலும் பணியாளர்களுடனே பெரும்பான்மையான நேரத்தை கழிக்கிறது. தொலைக்காட்சி, கைபேசி போன்றவையும் இன்றைக்கு குழந்தைகளின் விருப்பமாக மாறி விட்டன. 

இதனால் அப்படிப்பட்ட குழந்தைகள் படிக்கும் காலத்திலும் கணினி, கைபேசி, தொலைக்காட்சி ஆகியவற்றுடனே பெரும்பாலும் தங்களின் நேரத்தை செலவிடுபவர்களாக மாறுகின்றனர். இதனால் சக மனிதர்களுடன் பழகும் தன்மை, வெற்றி, தோல்விகளை சகஜமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் ஆகியவற்றை இழந்தவர்களாக வளர்கின்றனர். இந்திய மனிதவள திறன் குறைவாக இருப்பதை, உலக வங்கியின் மனித முதலீட்டு குறியீடு (ஹெச்.சி.ஐ) உணர்த்துகிறது. இந்தியாவின் ஹெச்.சி.ஐ. மதிப்பு 0.44 என்ற அளவிலேயே உள்ளது. இது சீனா(0.67), வியட்நாம் (0.67), ஏன் வங்கதேசத்தை(0.48) விடக்குறைவு. அதாவது இந்தியாவில் 2018-ல் பிறக்கும் குழந்தையின் ஆக்கவளம் 44 சதவீதம் மட்டுமே. ஆக்கவளத்தில் நிலவும் இந்த போதாமையை மீட்டெடுத்தோம் என்றால், நாட்டின் தனிநபர் வருவாயை அது கணிசமாக உயர்த்தும். இதனால், கல்வியின் தரத்தை வெகுவாக உயர்த்துவதும் கற்றலில் நிலவும் பற்றாக்குறையை களைவதும் அரசின் இன்றைய தலையாய கடமை. இதனால் மாணவர்கள் எதார்த்த வாழ்க்கையின் சிக்கல்களை உணராதவர்களாக இருக்கின்றனர். 

எப்போதுமே கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்களாக இருக்கின்றனர். இந்த கால மாணவர்களின் சிந்திக்கும் திறன் வளர்ந்திருக்கும் அளவுக்கு, கோபத்தை கட்டுப்படுத்தும் திறன் வளரவில்லை. மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த ஆலோசனை, உதவிகள் விழிப்புணர்வை வழங்குவதற்காகவே அரசின் இலவச தொலைபேசி எண் 104 செயல்படுகிறது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பொதுவாக சில யோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தோல்வியை எதிர்த்து போராடும் குணத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். மாணவர்களின் மீது பெற்றோர் நம்பிக்கை வைக்கும் அதேநேரத்தில், அவர்களின் நண்பர்கள் யார் யார், அவர்களின் நடவடிக்கைகள் என்ன என கண்காணிக்க வேண்டும். வளரிளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களுடன் பெற்றோர் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். 

குடும்பத்தில் ஏதாவது முக்கியமான நிகழ்வுகள், விழாக்கள் நடக்கும்போது, அவர்களுக்கு சிறிய அளவில் பொறுப்புகளை கொடுப்பதும் அவர்களின் கருத்துகளை கேட்பதும் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும். நேரத்தின் முக்கியத்துவத்தையும் காலத்தின் அருமையையும் மாணவர்களுக்கு பெற்றோர் பொறுமையாக உணர்த்த வேண்டும். உறவினர்களின் வீட்டு நிகழ்வுகளுக்கு தங்களின் குழந்தைகளையும் அழைத்து கொண்டுபோய், தங்கள் குழந்தைகள் எந்த அளவுக்கு பொறுப்பானவர்கள் என்பதை அவர்களின் முன்பாகவே பெற்றோர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment