சவாலான வேலைவாய்ப்பு உலகில், வேலை வழங்கும் நிறுவனங்கள் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக நுட்பமான கேள்விகளை கேட்டு திறமையை சோதிப்பது வழக்கம். சில நேரங்களில் வினோதமான கேள்விகளும் அங்கே இடம்பெறும்.
அப்படி, வேலைவாய்ப்பு தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட வினோத கேள்வி இணையதளத்தை கலக்கி வருகிறது.
பீட்டாகோல்ஷ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ள அந்த கேள்வி பலரையும் கவர்ந்து உள்ளது. 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் விருப்பங்களை பெற்று உள்ளது.
இதுதான் அந்த கேள்வி...
“உங்களிடம் ஒரு யானை வழங்கப்படுகிறது. அதை விற்கவும் முடியாது, கொடுக்கவும் முடியாது என்றால் யானையை என்ன செய்வீர்கள்?”
இந்த கேள்விக்கு விடை தெரிந்தால் பீட்டாகோல்ஷ் பக்கத்திற்கு சென்று உங்கள் பதிலை கமென்ட் செய்யலாம். அங்கு வெளியாகி இருக்கும் இந்த வினோத கேள்விக்கான, வித்தியாசமான பதில்கள் உங்களின் அடுத்த நேர்முகத் தேர்வுக்கு உதவலாம்...
No comments:
Post a Comment