பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு! மாவட்ட ஆட்சியர் தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, November 11, 2023

பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு! மாவட்ட ஆட்சியர் தகவல்

பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு! மாவட்ட ஆட்சியர் தகவல் 

ஊட்டி,நவ.11- ஊட்டியில் 23-ந் தேதி முதல் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- பட்டதாரி ஆசிரியர் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,222 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு 7.01.2024-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு http://www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று பி.எட்-ல் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு பேப்பர் 2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர தகுதிகளின் விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். பயிற்சி வகுப்பு இந்த தேர்வுக்கு உதவும் வகையில் ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. ஸ்மார்ட் போர்டு, இலவச வை-பை வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 23-ந் தேதி தொடங்க உள்ளது. இலவச பயிற்சி வகுப்புகளில் சேர வருகிற 17-ந் தேதிக்குள் நேரிலோ அல்லது Google Link https://forms.gle/rpQ559a1jWVNxSZc6 வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment