குழந்தைகளுக்கு காது குத்துவதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவை! - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, November 26, 2023

குழந்தைகளுக்கு காது குத்துவதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவை!

இந்திய கலாசாரத்தில் குழந்தைகளுக்கு காது குத்தும் வழக்கம் பரவலாக உள்ளது. இது அழகுக்  காகவோ, பழக்கவழக்கத்துக்காகவோ செய்யப்படு வது அல்ல. காது குத்துவதற்கு பின்னால் நிரூபிக்கப் பட்ட அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த நன்மை கள் உள்ளன. குழந்தைப் பருவத்திலேயே காது குத்துவது, மூளையின் ஆரோக்கியமான மற்றும் விரைவான வளர்ச்சிக்கு உதவும். அவ்வாறு காது குத்துவதற்கு முன்பு பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கே பார்ப்போம். 

குழந்தைகளுக்கு டெட்டனஸ் தடுப்பூசிகள் முழுவது மாக போட்ட பிறகுதான் காது குத்த வேண்டும். எனவே 1 முதல் 10 வயதுக்குள் குழந்தைகளுக்கு காது குத்துவது சரியானது. அதிக எடை கொண்ட காதணிகளைக் காட்டிலும், மெல்லிய, லேசான காதணிகளைத் தேர்வு செய்ய வேண்டும். 

காது குத்துவதற்கு முன்பு குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். உடல்நிலை சரியில்லாதபோது காதுகளில் துளையிட வேண்டாம். காது குத்தும்போது, குழந்தையின் கவனத்தை திசைதிருப்ப குழந்தைக்கு பிடித்த பொம்மை களைத் தேர்வு செய்து எடுத்துச் செல்லவும். காது குத்துவதற்கு முன்னர் துளையிடும் இடத்தை ஆல்கஹால் அல்லது வேறு ஏதேனும் தோல் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதன்  மூலம் கிருமித் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும். 

காது குத்தும் நபர் கையுறைகளை அணிந்து கொண்டு துளையிடுவது நல்லது. துளையிட பயன் படுத்தும் ஊசி அல்லது இயந்திரத்தின் சுகாதாரத்தை உறுதி செய்த பிறகே காதில் துளையிட வேண்டும். காது குத்திய உடன் தங்கம் மற்றும் ஸ்டெர்லிங் வெள்ளி காதணிகளை அணிவிப்பது நல்லது. இந்த வகை உலோகங்கள் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத் தாது. தங்கம் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு, அதற்கு மாற்றாக தங்க முலாம் பூசப்பட்ட, நிக்கல் கலக்காத உலோக காதணிகளை அணிவிக்கலாம். 

தொங்கும் வகையிலான காதணிகளை அணிவிப் பதை விட, காதோடு ஒட்டி இருக்கும்படியான காதணி களை அணிவித்தால் குழந்தைகள் இலகுவாக உணருவார்கள். இறுக்கமான காதணிகள் அணிவிப் பதையும் தவிர்க்க வேண்டும். காது குத்திய பின்பு ஒருசில நாட்கள் வரை, துளை யிட்ட பகுதி சிவந்து காணப்படும். துளையிடப்பட்ட இடத்தில் இருந்து சீழ் அல்லது திரவம் வெளியேறி னால், தொற்று ஏற்பட்டு இருக்கக்கூடும். 

இதன் காரணமாக சிறிய கொப்புளங்கள் அல்லது துளை யிடப்பட்ட பகுதிக்கு அருகில் பெரிய கொப்புளம் ஏற் படும். குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவதன் மூலமும் தொற்று வெளிப்படும். காது குத்தப்பட்ட சில மணி நேரங்கள் அல்லது சில நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் ஏற்படும். அவ்வாறு காய்ச்சலோ, நோய்த்தொற்றோ இருந்தால், குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். 

காது குத்திய பிறகு துளையிட்ட பகுதியில் ஒரு நாளுக்கு இரண்டு முறை கிருமிநாசினியைப் பூசவும். பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ள சோப்பு கொண்டு காதுகளைச் சுற்றியுள்ள பகுதியைக் கழுவவும். காயம் குணமாகும் வரை குழந்தைகளுக்கு பொத்தான்கள் கொண்ட ஆடைகளை பயன்படுத்துங்கள். இதனால் ஆடையை தலைக்கு மேல் இழுக்காமல் கழற்ற முடியும். ஆடை காதுகளில் பட்டு குழந்தைக்கு வலி உண்டாவதை தடுக்கவும் முடியும்.

No comments:

Post a Comment