வருவாய் மாவட்ட அளவில் ஆய்வக உதவியாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, November 27, 2023

வருவாய் மாவட்ட அளவில் ஆய்வக உதவியாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு

பார்வையில் காணும் அரசாணையின்படி, வருவாய் மாவட்ட அளவில் ஆய்வக உதவியாளர்களுக்கான விருப்ப மாறுதல் கலந்தாய்வினை கீழ்க்குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி 28.11.2023 அன்று நடத்தி முடித்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

1) மாறுதல் கோரும் ஆய்வக உதவியாளர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்படவேண்டும். 

2) மாறுதல் கோரும் விண்ணப்பத்தின் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்யப்படவேண்டும். 

3) ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு மாறுதல் அளிக்கப்படுவதற்கு முன்பாக அப்பணியிடம் IFHRMS தளத்தில் உள்ளீடு செய்து POST CODE பெறப்பட்டுள்ளதா என உறுதிசெய்து அதன் பின்னர் மாறுதல் வழங்கப்படவேண்டும். 

4) மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவேண்டும். 

5) இதில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் மாறுதல் வழங்கப்படவேண்டும். 

6) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் ஆய்வக உதவியாளர்களுக்கு மாறுதல் வழங்கப்பட்ட விவரத்தினை பூர்த்தி செய்து இவ்வியக்கக அ5 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு 29.11.2023-க்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தலாகிறது. 
 
ஆய்வக உதவியாளருக்கான விருப்பமாறுதல் கலந்தாய்வு கீழ்க்கண்ட முன்னுரிமைகளின் அடிப்படையில் விண்ணப்பங்களை பரிசீலித்து மாறுதல் ஆணை வழங்க வேண்டும். 

1) 100 சதவீதம் பார்வை குறைபாடு உடையவர்கள் 

2) மாற்றுத்திறனாளிகள் (40 சதவீதம் அதற்குமேல் ஊனம் உள்ளவர்கள்) (கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் உட்பட) 

3) மனவளர்ச்சி குன்றிய / மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் 4) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் / டையாலிசிஸ் சிகிச்சை/ இருதயமாற்று அறுவை சிகிச்சை / புற்றுநோயாளிகள் / மூளைகட்டி 

5) இராணுவத்தில் பணிபுரிந்தவர்களின் மனைவியர் 

6) விதவைகள் / மனைவியை இழந்தவர்கள் & 40 வயதை கடந்த திருமணம் செய்து கொள்ளாத முதிர் கன்னியர் / சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண் பணியாளர் 

7) கணவன், மனைவி பணி முன்னுரிமை மேற்காண் எந்த முன்னுரிமை (Priority) இல்லையெனில் Present Station (School) joining Date எடுத்துக் கொள்ள வேண்டும். Present Station ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த பதவியில் பணிவரன்முறை செய்த நாளினை ஒப்பிட்டு அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் பணிவரன்முறை நாளும் ஒன்றாக இருப்பின் Date of Birth-த்தினை ஒப்பிட்டு பார்த்து Seniority Arrive செய்யவேண்டும். 



No comments:

Post a Comment