மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒரு வருடம் ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சி - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, November 25, 2023

மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒரு வருடம் ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சி

ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சிக்கான சிறப்பு முகாம் 
குரோம்பேட்டையில், 29-ந் தேதி ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சிக்கான சிறப்பு முகாம் மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவிப்பு சென்னை, நவ.25- சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒரு வருடம் ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சி (அப்பரண்டீஸ்) அளிக்கப்பட உள்ளது. 

இந்த தொழில் பழகுனர் பயிற்சி பெற தகுதியான ஐ.டி.ஐ. பிரிவுகளில் (மோட்டார் மெக்கானிக்கல் வெகிகிள், மெக்கானிக் டீசல், எலெக்ட்ரீஷன் அன்ட் வெல்டர்) தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி அளவில், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment