இப்படியும் ஓர் தொழில்நுட்பம்...! - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, November 11, 2023

இப்படியும் ஓர் தொழில்நுட்பம்...!

இப்படியும் ஓர் தொழில்நுட்பம்...! 

‘பெப்பர் ேஹக்கர்' என்ற தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதை பார்க்கும் போது மிளகுப்பொடி எந்திரத்தைப் போல இருக்கும். வை-பை இணைப்புகள், மொபைல் மற்றும் டி.வி.யை இது 30 நிமிடங்கள் செயலிழக்கச் செய்யுமாம். டப்பாவில் இருக்கும் மிளகுப்பொடியை தூவுவதற்கு அதன் மூடியை திருப்புவது போல பெப்பர் ஹேக்கரின் தலையைத் திருப்பினால் போதும். இதை உருவாக்கியவர்கள் கூறுகையில், “எந்த தொழில்நுட்பங்கள் மக்களை இணைப்பதற்கு பயன்படுகிறதோ, அதே தொழில்நுட்பங்கள்தான் குடும்ப உறவுகளில் தொந்தரவையும் ஏற்படுத்துகின்றன. 
இரவு விருந்து மேஜையில் எல்லோரும் இருக்கும்போது, மற்ற சாதனங்கள் துண்டிக்கப்பட்டிருந்தால் அந்தப் பொழுது எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது என்பதைக் குடும்பத்தினர் உணரமுடிகிறது” என்கிறார்கள். மொபைல் மற்றும் கேட்ஜெட்களில் மூழ்கி வீட்டையே மறந்திருக்கும் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களிடம் இந்தக் கருவியைக் கொடுத்த சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், குழந்தைகளது எதிர்வினைகளையும் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். பெப்பர் ஹேக்கர் எந்திரத்தைப் பார்த்து தாய்மார்கள் சிலர் குழப்பம் அடைந்தாலும் பலர் நன்றி தெரிவித்தார்களாம். 
ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு வீட்டிலும் மொபைல், ஐபேட், டேப்லட், டி.வி. போன்ற 12 எலக்ட்ரானிக் கருவிகள் உள்ளன என்று புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. இந்தக் கருவிகளின் அதீதப் பயன்பாட்டால் வீடுகளில் பிரச்சினைகள் உருவாவதால் அவற்றின் பயன்பாடுகளுக்கு இந்த பெப்பர் ஹேக்கர் சற்று நேரம் தடை போடுவது வரவேற்ைபயும் பெற்றுள்ளதாம்...!

No comments:

Post a Comment