நவம்பர் மாதம் பள்ளிகளில் காட்டப்பட வேண்டிய சிறார் திரைப்படம் - குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, November 9, 2023

நவம்பர் மாதம் பள்ளிகளில் காட்டப்பட வேண்டிய சிறார் திரைப்படம் - குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்

நவம்பர் மாதம் பள்ளிகளில் காட்டப்பட வேண்டிய சிறார் திரைப்படம் - குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்!

2022-2023 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணறும் வகையில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக. 2023-2024 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாசாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை. நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல் பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்புநலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் ஆகியன இச்சிறார் திரைப்படம் திரையிடுதலின் நோக்கமாக அமைகிறது. மேலும், இத்திரைப்படங்களை கண்ணுறும் மாணவர்களின் விரிசிந்தனை மேம்படுதல் மற்றும் விமர்சிக்கும் திறன் உள்ளிட்ட பண்புகள் பெற இந்நிகழ்வு தூண்டுகோலாக அமைகிறது. 
Download Full Proceedings

No comments:

Post a Comment