வரவேற்பு நிறைந்த சமீபகால படிப்புகள்...! - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, November 4, 2023

வரவேற்பு நிறைந்த சமீபகால படிப்புகள்...!

இளங்கலை படிப்பில், சமீப காலமாக அதிக வரவேற்பு இருக்கும் சில படிப்புகளையும், அதன் பாட பிரிவுகளையும் தெரிந்து கொள்வோம். 

பி.ஏ.கிரிமினாலஜி பிளஸ்-2 வகுப்பில் எந்த ஒரு பிரிவை எடுத்துப் படித்திருந்தாலும், இந்தப் படிப்பில் சேர முடியும். ஆங்கில மொழிப் புலமை அவசியம். பிரின்சிபில்ஸ் ஆப் கிரிமினாலஜி, கிரிமினல் லாஸ், ஹியூமன் பிஹேவியர் அண்ட் கிரிமினாலஜி, சைக்காலஜி ஆப் கிரைம், கான்டெம்பரரி கிரைம்ஸ், போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன், கவுன்சலிங் அண்ட் கைடன்ஸ், ஹியூமன் ரைட்ஸ் அண்ட் தி ஸ்டடி ஆப் போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன், விஜிலன்ஸ் அண்ட் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட், பிரைவேட் டிடெக்‌ஷன் அண்ட் இன்வெஸ்டிகேஷன் ஆகியவை முக்கிய பாடங்களாக கற்றுத்தரப்படும். சில கல்லூரிகளில் பி.ஏ. கிரிமினாலஜி அண்ட் போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பெயரிலும் பட்டப்படிப்பு உள்ளது. கிரிமினாலஜி முடித்தவர்களுக்கு காவல்துறை பணிகளில், சிறைத்துறைப் பணிகளில் அதிக முன்னுரிமை வழங்கப்படும். தனியே டிடெக்டிவ் ஏஜென்ஸி, பாரன்ஸிக் லேப் நடத்தலாம். ராணுவ பணிகளிலும் சேரலாம். இதே துறையில் மேற்படிப்பு படித்து சிறைகளில் மன நல ஆலோசகராகப் பணியாற்றலாம். 

பி.காம். பேங்க் மேனேஜ்மெண்ட் தற்போது வங்கிகளில் பணியாற்றுவதற்காக பிரத்யேக படிப்புகள் உள்ளன. அதில் ஒன்று, இந்த பேங்க் மேனேஜ்மெண்ட். பிளஸ்-2 படிப்பில் கணிதம் அல்லது வணிக கணிதம், காமர்ஸ் ஆகியவற்றை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். பைனான்ஸியல் அக் கவுண்டிங், பிஸினஸ் கம் யூனிகேஷன், பிரின்ஸிபல்ஸ் ஆப் மைக்ரோ எகனாமிக்ஸ், பிரின்ஸிபல்ஸ் ஆப் மேனேஜ்மெண்ட், பிரின்ஸிபல்ஸ் ஆப் மேக்ரோ எகனாமிக்ஸ், கார்ப்பரேட் அக்கவுண்டிங், பிசினஸ் லா, பேங்கிங் தியரி, லா அண்ட் பிராக்டீஸ், பிசினஸ் ஸ்டாட்டிஸ்டிக்ஸ், பிசினஸ் மேத்தமேட்டிக்ஸ், பிசினஸ் டாக்ஸேசன், தியரி ஆப் மணி அண்ட் பேங்கிங், டெக்னாலஜி இன் பேங்கிங், பிராக்டிக்கல் ஆடிட்டிங், இண்டர்நேஷனல் பேங்கிங், இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் ஆப் பேங்கிங் சர்வீஸஸ் ஆகியவை முக்கிய பாடங் களாக கற்றுத்தரப்படும். அரசு மற்றும் தனியார் வங்கிகளில், நிதித்துறை நிறுவனங்களில், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். 



பி.பி.ஏ.என்டர்பெர்னர்ஷிப் அண்ட் பேமிலி பிசினஸ் சுயமாக தொழில் தொடங்கி சாதிக்கவேண்டும், தனது குடும்பத் தொழிலை நல்ல நிலையில் உயர்த்த வேண்டும் என்று விரும்புவோருக்கு ஏற்ற படிப்பு. பிளஸ்-2 வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பில் மனித வள மேலாண்மை, மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், பைனான்ஸ் மேனேஜ்மெண்ட், அக்கவுண்டிங், இன்கம்டாக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், ஆர்கனைசேஷன் பிகேவியர், எகனாமிக்ஸ், பேமிலி பிஸினஸ் மேனேஜ்மெண்ட், பிஸினஸ் லா, பிஸினஸ் எத்திக்ஸ், புரடக்‌ ஷன் மேனேஜ்மெண்ட், காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக் கவுண்டிங், பிசினஸ் கம்யூனி கேஷன், என்டர்பெர்னர்ஷிப் ஆகியவை முக்கிய பாடங்களாக கற்றுத்தரப்படும். 

 பி.பி.ஏ. லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் வெளிநாடு அல்லது உள்நாட்டில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்யும் வேலை சம்பந்தப்பட்ட படிப்பு இது. நீர் வழி, வான் வழி, தரை வழி என மூன்று வழிகளிலும் பொருட்களை ஏற்றி, இறக்கும் சட்டமுறைகள், வழிமுறைகள், பொருட்களின் தேவை, சரக்குகளைக் கையாளுதல் போன்றவற்றில் எப்போதுமே வேலைவாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த துறையில் நுழைய விரும்பு வோருக்கு ஏற்ற படிப்பு. பிளஸ்-2 வகுப்பில் வணிகம் அல்லது கணிதம் ஆகியவற்றை முக்கிய பாடமாக எடுத்துப் படித்து, 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேனேஜ்மெண்ட் பிராசஸ், அக்கவுண்டிங் பார் மேனேஜர்ஸ், மேத்தமெட்டிக்ஸ் பார் மேனேஜர்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், எக்ஸ்போர்ட் டிரேட் அண்ட் டாக்குமெண்டேஷன், இன்டர்நேஷனல் ஸ்ட்ரேட்டஜிக் மேனேஜ்மெண்ட், இ-லாஜிஸ்டிக்ஸ், ஷிப்பிங் அண்ட் போர்ட் மேனேஜ்மெண்ட், ஏர் கார்கோ லாஜிஸ்டிக்ஸ், டிரான்ஸ்போர்ட்டேஷன் வேர் ஹவுசிங் அண்ட் பிரெயிட் மேனேஜ்மெண்ட், ரீடெய்ல் சப்ளை மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட முக்கிய பாடங்கள் கற்றுத் தரப்படும். படிப்பை முடித்த பட்டதாரிகள் சரக்குகளைக் கையாளும் நிறுவனங்களில் கஸ்டமர் சர்வீஸ் மேனேஜர், வெகிக்கிள் பிளீட் மேனேஜர், டிஸ்ட்ரி பியூஷன் சென்டர் ஆபீசர், இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் ஏஜெண்ட், கார்கோ ஆபரேஷன்ஸ் ஸ்பெஷலிஸ்ட், இன்வெட்டரி கண்ட்ரோல் மேனேஜர், பர்ச்சேஸிங் மேனேஜர், அகாடமிக் ஆப் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட், ப்ரெயிட் கோஆர்டினேட்டர் ஆகிய பணிகளில் சேரலாம்.

No comments:

Post a Comment