அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நிரவல் பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, November 14, 2023

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நிரவல் பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் சார்ந்த வழிகாட்டு செயல்முறைகளை பள்ளிக்கல்வித்துறை வௌியிட்டுள்ளது. 
 நிதியிழப்பு அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, வெளியிட்டுள்ள வழிகாட்டு செயல்முறைகளில் கூறியிருப்பதாவது:- அரசு உதவிபெறும் பள்ளிகளின் உபரி பணியிடங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், தொடர்ந்து அதே இடத்தில் பணியாற்றுவதால் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க, ஐகோர்ட்டு பல்வேறு வழக்குகளில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, 2023-24-ம் கல்வியாண்டில், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணியாற்றும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது சார்ந்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. 

பணி நிரவல் அதன்படி, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரத்தை, பாடம், பதவி வாரியாக பட்டியல் தயார் செய்ய வேண்டும். கூட்டு மேலாண்மை பள்ளிகள் தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் விவரத்தை வரும் 20-ந்தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகர்களிடம் ஒப்படைக்க வேண்டும். உபரி ஆசிரியர்களை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணி நிரவல் நடவடிக்கைகளை வரும் 28-ந்தேதிக்குள் நிறைவு செய்யவேண்டும். இது தொடர்புடைய விவரங்களை வரும் 29-ந்தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 

 கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ‘எமிஸ்' தளத்தில் அதன் விவரங்களை வருகிற 30-ந்தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். அதன்பிறகு, மாவட்டத்தில் உள்ள மற்ற உபரி ஆசிரியர்கள் விவரங்களை டிசம்பர் 5-ந்தேதி எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விவரங்கள் அடிப்படையில், டிசம்பர் 20-ந்தேதி மாவட்டத்திற்குள் பணி நிரவல் கலந்தாய்வு எமிஸ் இணையதளத்தில் நடைபெறும். இதில், ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாளின் அடிப்படையில் முன்னுரிமையும், மாற்றுத்திறனுடைய ஆசிரியர்களுக்கு சிறப்பு முன்னுரிமையும் வழங்கப்படும். பணிநிரவல் நடவடிக்கைகளில் பள்ளி நிர்வாகங்கள் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்கக்கூடாது. இதற்கான அறிவுரைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment