'எமிஸ்' ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, November 2, 2023

'எமிஸ்' ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்

பள்ளிகளில், 'எமிஸ்' ஆன்லைன் பணிகளை பார்க்க, மாவட்ட வாரியாக தற்காலிக ஊழியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அரசின் நேரடி கட்டுப்பாட்டில், மாநிலம் முழுதும், 24,000 தொடக்க பள்ளிகள்; 7,000 நடுநிலை பள்ளிகள், 6,000 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் என, மொத்தம், 37,000 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன.

இவற்றில் படிக்கும், 50 லட்சம் மாணவ- - மாணவியர், 2.50 லட்சம் ஆசிரியர்கள் தொடர்பான, வருகைப்பதிவு, விடுப்பு, மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள், கற்றல், கற்பித்தல் பயிற்சி, தேர்வுகள் உள்ளிட்டவை தொடர்பாக, எமிஸ் என்ற ஆன்லைன் தளத்தில், தினமும் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பதிவுகளை தாங்களே மேற்கொண்டு வருவதால், பாடம் நடத்த நேரமில்லை என, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

மேலும், எமிஸ் ஆன்லைன் பதிவு பணிகளை மேற்கொள்ளாமல், நேற்று முதல் ஆன்லைன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுஉள்ளனர். இதனால், எமிஸ் ஆன்லைன் பதிவு பணி தொய்வடைந்துள்ளது. இந்நிலையில், எமிஸ் பணி களை பார்க்க, தற்காலிக ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வி முடிவு செய்துள்ளது. அதுவரை, பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்தி, எமிஸ் பணிகளை மேற்கொள்ள, பள்ளி களை, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


No comments:

Post a Comment