தினமும் ஆரஞ்சு ஜூஸ் பருகுங்கள் | Drink orange juice daily - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, November 11, 2023

தினமும் ஆரஞ்சு ஜூஸ் பருகுங்கள் | Drink orange juice daily

தினமும் ஆரஞ்சு ஜூஸ் பருகுங்கள் | Drink orange juice daily 
உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். சோர்வை விரட்டி மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு இருக்கிறது. காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது உடற்பயிற்சி செய்த பிறகோ ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். 
அதில் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் ஏராளம் நிறைந்திருக்கின்றன. தினமும் ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் மூளை உறைவு பிரச்சினைக்கான வாய்ப்பு 24 சதவீதம் குறையும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
பக்கவாதம் வராமல் தடுக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் ஆரஞ்சுக்கு இருக்கிறது. அதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நேராமல் காக்க உதவும். ஆரஞ்சு சாறில் ஆன்டி ஆக்சிடெண்ட் நிறைந்திருக்கிறது. அது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். சுருக்கங்கள் நேராமல் தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும். விரைவில் முதுமை நெருங்காமல் தடுக்கும். கோடை காலங்களில் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருக வேண்டும். 
கதிர்வீச்சு பிரச்சினையில் இருந்து சருமத்தை காக்க உதவும். ஆரஞ்சு ஜூஸில் கலோரி குறைவாகவே இருக்கிறது. அதில் கொழுப்பு துளியும் இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருகி வரவேண்டும். ஆரஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஆரஞ்சு பழத்தில் நரின்கைன், ஹெஸ்பிரிதின் போன்ற பிளாவோனாய்டுகள் இருக்கின்றன. 
அவை மூட்டு வலிக்கு நிவாரணம் தேடி தரும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சிட்ரேட் அதிக செறிவு கொண்டவை. கால்சியம் ஆக்ஸலேட் எனும் கல் உருவாகுவதை தடுக்கும் தன்மை ஆரஞ்சுக்கு இருக்கிறது. ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.

Drink orange juice daily Drink orange juice daily

Orange juice can be consumed for active physical activity. It has the power to ward off fatigue and keep the mood upbeat. Orange juice can be consumed after eating breakfast or after exercising.

It is rich in minerals, nutrients and vitamins that strengthen the body's health. A study found that drinking orange juice daily can reduce the risk of stroke by 24 percent.

It has also been shown to prevent strokes. Oranges also have immunity-boosting properties. The vitamin C contained in it will help prevent the effects of cough and flu. Orange juice is rich in antioxidants. It adds glow to the skin. Contractions help protect against injury. Prevents premature aging. Orange juice must be consumed during summers.

It helps to protect the skin from radiation problem. Orange juice is low in calories. There is no fat in it. So those who want to lose weight must drink orange juice. Orange also contains calcium. It also improves bone health. Oranges contain flavonoids like narinkin and hesprithin.

They provide relief from joint pain. Oranges are high in citrate. Orange has the ability to prevent the formation of calcium oxalate stones. You can also get relief from the pain caused by kidney stones by drinking orange juice.

No comments:

Post a Comment