பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, November 21, 2023

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு 
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுவதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 2,222 காலிப்பணியிடங்கள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2023-ம் ஆண்டு திட்ட நிரலில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 2,222 காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு 7.1.2024 அன்று நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த தேர்விற்கு http://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக 30.11.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட். படித்திருக்க வேண்டும். மேலும் டெட் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலவச பயிற்சி வகுப்பு இதற்கிடையே கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 

 எனவே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் நேரில் பதிவு செய்து கொள்ளலாம். மாதிரி தேர்வு இப்பயிற்சி வகுப்பு அனுபவமிக்க சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. 

மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 04142-290039 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். எனவே போட்டித் தேர்வெழுதும் இளைஞர்கள், இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment