தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி - IC பணி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு TNPSC செய்திக்குறிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, November 10, 2023

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி - IC பணி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு TNPSC செய்திக்குறிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீட்டு எண்: 80/2023 நாள்: 10.11.2023 21.11.2023 முற்பகல் மற்றும் பிற்பகல் மற்றும் 22.11..2023 முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி - IC பணி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு. 

செய்திக்குறிப்பு 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 37/2022, நாள் 14. 12. 2022- இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர்(தொகுதி - Ic பணி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடிநியமனம் செய்வதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு 21.11.2023 முற்பகல் மற்றும் பிற்பகல் மற்றும் 22.11.2023 முற்பகல் மற்றும் பிற்பகல் சென்னை மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது. தேர்வு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும். 

No comments:

Post a Comment