வீட்டில் பாதுகாப்பு கேமரா பொருத்தப் போகிறீர்களா? - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, November 26, 2023

வீட்டில் பாதுகாப்பு கேமரா பொருத்தப் போகிறீர்களா?

வீடு மற்றும் உடமைகளுக்கான பாதுகாப்புக்காக செய்யப்படும் முதலீட்டில் முக்கியமானது சி.சி. டி.வி. எனப்படும் பாதுகாப்பு கேமரா பொருத்துவது. இது உங்களுடைய சுற்றுப்புறங்களில் நடக்கும் குற்றங் களைத் தடுப்பதற்கு உதவும். சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் வீட்டை திருடர்கள் குறிவைப் பதற்கான வாய்ப்பும் குறைவு. உங்களுடைய சொத் துக்களுக்கு மட்டுமில்லாமல், வீட்டில் இருக்கும் குழந்தைகள், செல்லப்பிராணிகள் போன்றவற்றின் பாதுகாப்பிற்கும் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது அவசியமாகும். 

உங்களுடைய வீட்டில் பாதுகாப்பு கேமராக்களை அமைக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம். 

வீட்டைச் சுற்றி எப்போதும் கண் காணித்துக் கொண்டிருப்பது முடி யாத காரியம். அந்த குறைகளை பாதுகாப்பு கேமராக்கள் செய்கின்றன. சி.சி.டி.வி. கேமரா பொருத்தும்போது வீட்டைச் சுற்றி யுள்ள பகுதி முழுவதையும் கண்கா ணிக்கும் வகையில் சரியான இடங் களில் பொருத்த வேண்டும். 

உங்கள் வீட்டைக் கடந்து செல்லும் நடை பாதை, தெரு போன்ற பொது இடங்களையும் பாது காப்பு கேமரா படம்பிடிக்க அனுமதிக்கலாம். இது உங்கள் பகுதியில் சமூக குற்றங்கள் எதுவும் நடை பெறாமல் கண்காணிக்க உதவும். நீங்கள் கேமராவை பொருத்தும் இடத்தில் ஏதேனும் தடைகள் இருக்கிறதா என்று கவனியுங்கள். உதாரணமாக கேமரா பொருத்தும் இடங்களில் மரங்கள் இருந்தால், காலப்போக்கில் கிளைகள் வளர்ந்து காட்சி கள் தெரியாமல் மறைக்கக்கூடும். 

பூனை போன்ற செல்லப்பிராணிகள் கேமராவை சேதப்படுத்தாமல் பாதுகாப்பான வகையில் பொருத்துங்கள். கேமராவை தரையில் இருந்து 10 அடி உயரத்திற்கு மேல் இருக்குமாறு பொருத்துவது நல்லது. சி.சி.டி.வி. கேமராக்களை உங்கள் சொந்த இடங்களை கண்காணிப்பதற்காக மட்டும் பொருத்துங்கள். பொது இடம் தவிர, மற்றவர்களின் இடங்களையும் கண்காணிக்கும் வகையில் பொருத்துவது வரம்பு மீறிய செயலாகும். 

உங்கள் தனிப்பட்ட உரிமையை மீறும் வகையில் படுக்கை அறை, குளியல் அறை போன்ற இடங்களில் பொருத்தாதீர்கள்.  

திருட்டு மற்றும் சொத்துக்கள் சேதமடைதல் குறித்த பயம் இருப்பவர்கள், வேலையாட்களைக் கண்காணிக்க நினைப்பவர்களுக்கு சி.சி.டி.வி. கேமரா ஒரு பயனுள்ள முதலீடாகும். வயர்லெஸ், அதிக தெளிவு திறன், ஆடியோ ஆப்ஷன், அதிக வீடியோ சேமிப்புத்திறன், இரவிலும் தெளிவாக கண்காணிக்கும் திறன் போன்ற பலதரப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் சி.சி.டி.வி. கேமராக்கள் சந்தை களில் கிடைக்கின்றன. 

உங்கள் சுற்றுப்புறத்தை முழு வதுமாக காட்சிப்படுத்த தேவை கேமராக்களின் யான எண் ணிக்கை, கேமராவின் கவரேஜ் பகுதி, இரவிலும் தெளிவுத்திறன். கேமராவின் விலை மற்றும் இதர வசதிகளையும் கருத்தில் கொண்டு நல்ல தரமதிப்பீடு பெற்ற கேம ராக்களை தேர்வு செய்யுங்கள். கேபிள் இணைப்பு உள்ள கேமராக்களை பொருத்தும்போது அந்த கேபிள்கள் சேதம் அடையாமல் பார்த்துக்கொள்வது முக்கியமானது. வீட்டில் கேமராவை நிறுவும் முன்பு அதுசார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியை நாடுவது நல்லது. 

சில நவீன வீட்டு பாதுகாப்பு கேமராக்களில், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அவசர சேவை தொடர்புகொள்ளும் வசதிகளும் உண்டு. சந்தா அடிப்படையிலான கேமராக்கள் நிகழ்நேர நேரடி கண்காணிப்பை வழங்குவதோடு, ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் கண்டறியப் பட்டால் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு உடனடி தகவல்களையும் அனுப்பும்.

No comments:

Post a Comment