JEE-MAIN EXAM எழுத விருப்பம் தெரிவித்துள்ள மாணவர்களின் பெயர்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, November 8, 2023

JEE-MAIN EXAM எழுத விருப்பம் தெரிவித்துள்ள மாணவர்களின் பெயர்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்

JEE-MAIN EXAM எழுத விருப்பம் தெரிவித்துள்ள மாணவர்களின் பெயர்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து  மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்

நான் முதல்வன் திட்டம் 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் JEE-MAIN நுழைவு தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள மாணவர்களின் தகவல்களைச் சேகரித்தல் சார்ந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொறியியல் நுழைவுத் தேர்விற்கான (JEE MAIN) விண்ணப்பங்கள் 01.11.2023 அன்று திறக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, முதன்மை பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிக்க விருப்பமுள்ள மாணவர்களின் பட்டியலை 08.11.2023 க்குள் பள்ளி அளவில் தலைமை ஆசிரியர் / உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு: கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த பாடப் பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலும். 


No comments:

Post a Comment