‘ஜீவன் உத்சவ்' புதிய திட்டம் அறிமுகம்
எல்.ஐ.சி. நிறுவனம் தகவல்
எல்.ஐ.சி. சார்பில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி, எல்.ஐ.சி.யின் ஜீவன் உத்சவ் திட்டமானது, ஒரு தனிநபர், சேமிப்பு, முழு ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும். இது பிரீமியம் செலுத்தும் காலம் முழுவதும் உறுதியளிப்பு தொகை அளிக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் திட்டமாகும். இந்த புதிய திட்டத்தை எல்.ஐ.சி. நிறுவன தலைவர் சித்தார்த் மொஹந்தி நேற்று அறிமுகப்படுத்தினார்.
இந்த திட்டத்தில் 90 நாட்கள் முதல் 65 வயது வரை உள்ளவர்கள் பயன்பெறலாம். ஆயுள் முழுவதும் உறுதியளிக்கப்பட்ட வருமானம் மற்றும் ஆயுள் முழுவதும் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச பிரீமியம் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள். அதிகபட்சமாக 16 ஆண்டுகள். ஒவ்வொரு பாலிசி வருடமும் பிரீமியம் செலுத்திய பிறகு அடிப்படை காப்புத்தொகையின் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ.40 உறுதியளிப்பு தொகையாக, பிரீமியம் செலுத்தும் காலத்தில் பாலிசி வருட முடிவில் வரவு வைக்கப்படும். பிரீமியம் செலுத்தும் காலத்துக்கு பிறகு பாலிசிதாரர் வாழ்வுக்கால பயனாக சீரான வருமான பலன், விருப்ப வருமான பலன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்
LIC launches new program 'Jeevan Utsav' Company Information
LIC A new scheme has been introduced. Accordingly, LIC's Jeevan Utsav plan is an individual, savings, whole life insurance plan. It is a defined premium payment plan that provides a sum assured throughout the premium payment period. LIC has launched this new scheme. Company Chairman Siddharth Mohanty introduced yesterday.
People aged between 90 days to 65 years can benefit from this scheme. Guaranteed income for life and insurance coverage for life is provided. Minimum premium payment period is 5 years. Maximum 16 years. A sum assured of Rs.40 for every thousand rupees of basic sum assured after paying premium every policy year will be credited at the end of the policy year during the premium paying period. After the premium payment period, the policyholder can choose either the regular income benefit or discretionary income benefit as the lifetime benefit.
No comments:
Post a Comment