தங்கம் விலை கடந்து வந்த பாதை | The path the gold price has traversed - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, November 30, 2023

தங்கம் விலை கடந்து வந்த பாதை | The path the gold price has traversed

தங்கம் விலை கடந்து வந்த பாதை
தங்கம் விலை கடந்து வந்த பாதை தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.46 ஆயிரத்து 960-க்கு விற்பனை ஆனது. இதன் மூலம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டுள்ளது. 

 தங்கம் விலை 

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்தபடி இருந்து, கடந்த 2020-ம் ஆண்டில் ரூ.30 ஆயிரத்தை தொட்டது. அதன்பின்னர், 2021-ம் ஆண்டில் ரூ.35 ஆயிரத்தையும் கடந்தது. இப்படியாக தொடர்ந்து அதிகரித்து கடந்த ஆண்டில் (2022) ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. இந்த ஆண்டில் ரூ.45 ஆயிரத்தையும் தங்கம் விலை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது. இடையில் ஓரளவுக்கு விலை குறைந்தாலும், பெரும்பாலான நாட்களில் விலை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் கடந்த மாதம் (அக்டோபர்) இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக தங்கத்தின் விலை 'கிடுகிடு'வென உயரத்தொடங்கி இருக்கிறது. 

 வரலாறு காணாத உச்சம் 

அந்த வகையில் கடந்த 27-ந் தேதி தங்கம் விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 780-க்கும், ஒரு பவுன் ரூ.46 ஆயிரத்து 240-க்கும் விற்பனை ஆனது. இது புதிய உச்சமாக பார்க்கப்பட்டது. அதற்கு முன்பு கடந்த மே மாதம் 5-ந் தேதி ஒரு பவுன் ரூ.46 ஆயிரத்து 200 இருந்ததுதான் புதிய உச்சமாக இருந்தது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 780-க்கும், ஒரு பவுன் ரூ.46 ஆயிரத்து 240-க்கும் விற்பனையான தங்கம் விலை, நேற்று மாலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 870-க்கும், ஒரு பவுன் ரூ.46 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. கடந்த 2006-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.5 ஆயிரத்து 688-க்கு விற்பனையான நிலையில், தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 870-க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. 


 விலை குறையுமா? 

தங்கம் விலை உயர்வு குறித்து மெட்ராஸ் வைரம், தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, ‘போர் பதற்றம், உலக பொருளாதாரத்தில் நிலவும் மோசமான நிலை ஆகியவற்றால் உலக நாடுகளில் உள்ள அனைத்து முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். 

தற்போது நம்பிக்கை தரக்கூடிய ஒரே முதலீடாக தங்கம்தான் உள்ளது. அதனால் அதன் விலை தொடர்ந்து உயருகிறது. இதே நிலை நீடித்தால் வெகு விரைவில் ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கிவிடும். இனிவரக்கூடிய நாட்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்' என்றார். தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் நேற்று அதிகரித்திருந்தது. கிராமுக்கு 70 காசும், கிலோவுக்கு ரூ.700-ம் உயர்ந்து, ஒரு கிராம் 82 ரூபாய் 20 காசுக்கும், ஒரு கிலோ ரூ.82 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.

The path the gold price has traversed

The path taken by the gold price The price of gold rose by Rs.720 per pound yesterday and was sold at Rs.46 thousand 960 per pound. With this, the price of gold has touched a new high.

  Gold price

Gold prices have been rising at a rocket pace for the past few days. In 2012, a pound of gold was sold at over Rs.20 thousand, but the price continued to increase and reached Rs.30 thousand in 2020. After that, in 2021, it crossed Rs.35 thousand. This continued to increase and in the last year (2022) it crossed Rs.40 thousand. This year gold price has crossed Rs.45 thousand and is registering a new peak. Although the price has fallen somewhat in between, the price has remained high on most days. Moreover, due to the war between Israel-Palestine last month (October), the price of gold has started to skyrocket.

  An unprecedented high

In that way, the price of gold rose on the 27th, one gram was sold at Rs.5 thousand 780 and one pound was sold at Rs.46 thousand 240. This was seen as a new peak. Before that, the new peak was Rs. 46 thousand 200 per pound on May 5. In this situation, the price of gold rose sharply yesterday. The price of gold, which was sold at Rs. 5 thousand 780 per gram and Rs. 46 thousand 240 per pound yesterday, increased by Rs. 90 per gram and Rs. 720 per pound as of yesterday evening, and rose to Rs. 5 thousand per gram. 870 and one pound was sold at Rs.46 thousand 960. With this, the price of gold has touched a new high yesterday. While one pound of gold was sold at Rs.5 thousand 688 in the last year 2006, now one gram of gold is selling at Rs.5 thousand 870.

  Will the price drop?

When asked Jayantilal Shalani, president of Madras Diamonds and Gold Traders Association about the rise in gold prices, he said, 'Because of the war tension and the bad situation in the global economy, all the investors in the world are interested in investing in gold.

Gold is the only reliable investment right now. So its price continues to rise. If the same situation continues, very soon a pound will be close to Rs.55 thousand. "There is little chance of gold prices falling in the coming days," he said. Like gold prices, silver prices also increased yesterday. 70 paise per gram and Rs. 700 per kg rose, one gram was sold at 82 rupees 20 paise and one kg was sold at Rs. 82 thousand 200.

No comments:

Post a Comment