வீடுகளில் இருந்தபடியே ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் | Pensioners can submit survival certificate while staying at home - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, November 30, 2023

வீடுகளில் இருந்தபடியே ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் | Pensioners can submit survival certificate while staying at home

தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 
மத்திய அரசு ஓய்வூதியர்கள் கடந்த 1- ந்தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அஞ்சல் துறை சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். உயிர்வாழ் சான்றிதழை நேரில் சென்று சமர்ப்பிக்க ஓய்வூதியர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை (ஜீவன்பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. 

இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும். போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை அஞ்சலகங்கள் மூலமும், ஸ்மார்ட் போன்கள் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் மூலமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியர்கள் மத்திய அரசு ஓய்வூதியர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதியை தபால்காரர் தொடர்பு கொள்ளலாம்.

 https://ccc.cept.gov.in/servicerequest/request.aspx என்ற இணையதள முகவரி அல்லது "post info"செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம். மத்திய அரசு ஓய்வூதியர்கள் மட்டுமின்றி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களும் இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

A press release issued by Dharmapuri Postal Divisional Superintendent Munikrishnan states:-

Central government pensioners have been directed to submit their survival certificate from 1st of last month. Pensioners can submit digital survival certificate from home using postal department service. India Post Payments Bank, which operates under the Department of Posts, has arranged for pensioners to submit a digital survival certificate (Jeevanpraman) using biometrics at their homes to avoid the hassle of submitting the survival certificate in person.

A service charge of Rs.70 has to be paid for this. Post Payments banking services are offered through post offices, smart phones and biometric devices. Pensioners who want to get this digital survival certificate service can contact the nearest post office or postman of their area of central government pensioners.

  You can register a service request by visiting the website https://ccc.cept.gov.in/servicerequest/request.aspx or by downloading the "post info" tool. Not only Central Government pensioners but also pensioners receiving pension through Employees Provident Fund Corporation can use this facility to submit survival certificate from home. It says so.

No comments:

Post a Comment