சிறு விஷயங்களுக்கும் பதற்றம் ஏன்?
உடல் மற்றும் மனம் என இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு மனப்பதற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். மனப்பதற்றத்தை தணிப்பதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது, வாழ்க்கை முறையில் மாற்றங்கள்.
உடல் எடை அதிகமாக இருந்தால். எடையைக் குறைத்தாலே பாதி பிரச்சினைகள் சரியாகும். தவறாமல் உடற்பயிற்சி செய்தாலே, மனப்பதற்றமும் மனச் சோர்வும் வெகுவாகக் குறையும். ஆரோக்கியமான, உறுதியான உடல்தான் பதற்றமில்லாத மனதுக்கு ஆதாரம்.
குறிப்பாக யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை பயன்தரும்.
காபி, டீ போன்ற பானங்களை அதிகம் அருந்துவதும் மனப்பதற்றத்தை அதிகரிக்கும். அவற்றைக் குறைத்துக்கொண்டு நிறைய காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள்.
எதிர்மறையான சிந்தனையையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். சிறு விஷயங்களுக்குக்கூடப் பதற்றப்பட்டு, பின்னர் அதுவே ஒரு பழக்கமாக ஆகிவிடும்.
பிறகு பல நேரம் நம்மை அறியாமலேயே பதற்றம் வந்துவிடும்.
‘ஒரு விஷயம் நடந்துவிடுமோ' என்று நாம் கற்பனை செய்வதால், எதுவும் நடக்கப்போவதில்லை. ஏன் பதற்றப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் இருந்தாலே பதற்றம் வராது. இந்த வழிமுறைகள் எல்லோருக்கும் தெரிந்தவைதான். அவற்றைச் செயல்படுத்துவதில்தான் இருக்கிறது, சூட்சுமம்.
Why worry about small things?
Body and mind cannot be separated. Stress can also be a factor in diabetes and blood pressure problems. The first thing we need to do to reduce stress is to make lifestyle changes.
If you are overweight. Losing weight will solve half of the problems. Exercising regularly can greatly reduce stress and fatigue. A healthy, strong body is the source of a stress-free mind. Yoga and breathing exercises are especially helpful.
Drinking a lot of drinks like coffee and tea can also increase anxiety. Reduce them and eat more vegetables and fruits. We also need to change negative thinking. Getting nervous about even the smallest things becomes a habit.
Then many times tension will come without us knowing. Because we imagine that 'something will happen', nothing will happen. If you are aware of why you should be nervous, you will not be nervous. These methods are known to everyone. The trick lies in implementing them.
No comments:
Post a Comment