அரசு தேர்வுகள் இயக்குனர் சா.சேதுராமவர்மா, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல், எமிஸ் தரவுகள் அடிப்படையில் தயார் செய்யப்படுகின்றன.
இதற்கு, மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், சாதி, மதம், பயிற்றுமொழி, வீட்டு முகவரி, பெற்றோர் ஆண்டு வருமானம் உள்பட 13 வகையான தகவல்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவற்றை சரிபார்க்க, கடந்த மாதம் 30-ந்தேதி வரை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது, பள்ளி தலைமையாசிரியர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் மாணவர்களின் விவரங்களைwww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு, உறுதிமொழி படிவம் பதிவிறக்கம் செய்து, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் கையெழுத்து பெறவேண்டும்.பெயர் பட்டியல் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்யப்படும் என்பதால், தலைமையாசிரியர்கள் இந்த பணியை தங்களின் நேரடி கவனத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களில் தவறுகள் ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளி தலைமையாசிரியரே முழு பொறுப்பு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment