10, 11-ம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு நடைபெறுவதால் தட்டச்சு தேர்வு தேதி மாற்றப்படுமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, December 9, 2023

10, 11-ம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு நடைபெறுவதால் தட்டச்சு தேர்வு தேதி மாற்றப்படுமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பு

10, 11-ம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு நடைபெறுவதால் தட்டச்சு தேர்வு தேதி மாற்றப்படுமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பு 10, 11-ம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு நடைபெறுவதால் தட்டச்சு தேர்வுக்கான தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்துள்ளனர். 
தட்டச்சு தேர்வு 

தமிழகத்தில் 4,500 தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி பயிலகங்கள் உள்ளன. இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 140 பயிலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆண்டுக்கு 2 தேர்வுகளை, அதாவது பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடத்துகிறது. இதில் ஒவ்வொரு தேர்வையும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வு பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கடைசி வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் தேர்வை சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நடத்தப்போவதாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 24, 25 மற்றும் 26-ந்தேதிகளில் நடத்தப்பட உள்ளது. 

அதிர்ச்சி இந்த அறிவிப்பால் தேர்வு எழுத இருக்கும் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வை பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தான் அதிகம் பேர் படித்து எழுதி வருகிறார்கள். இதனால் அவர்கள் திங்கட்கிழமை நடைபெறும் தேர்வை எழுத முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மேலும் 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேதியில் செய்முறை பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும் என்று ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தவிர கல்லூரிகளில் நடைபெறும் செமஸ்டர் தேர்வும் இதே நாளில் தான் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயிலகங்களை நடத்தி வருவோரும், தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். ஆகவே இந்த தட்டச்சு தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

கலந்தாய்வு செய்து அறிவிக்க வேண்டும் இது பற்றி கடலூர் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தட்டச்சு பயிலக உரிமையாளர்கள் சங்கத்துடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல், தன்னிச்சையாக இப்படி ஒரு முடிவு எடுத்தது மாணவ சமுதாயத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளும், கல்வித்துறையினரும் இது தொடர்பாக கலந்தாய்வு செய்து தக்க முடிவை அறிவிக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் கணபதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment