தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு விண்ணப்பிக்க 19-ந்தேதி கடைசி நாள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, December 2, 2023

தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு விண்ணப்பிக்க 19-ந்தேதி கடைசி நாள்

தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு விண்ணப்பிக்க 19-ந்தேதி கடைசி நாள் 
2023-24-ம் கல்வியாண்டுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு (என்.எம்.எம்.எஸ்.) தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 3-ந்தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வருகிற 4-ந்தேதி (நாளை மறுதினம்) முதல் 19-ந்தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பள்ளிகள், மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணையவழி விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் 19-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருக்கிறது.

No comments:

Post a Comment