20-ந் தேதி உள்ளூர் விடுமுறை - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, December 16, 2023

20-ந் தேதி உள்ளூர் விடுமுறை

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வருகிற 20-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அன்று மாலை 5.20 மணிக்கு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த விழாவில் புதுச்சேரி, தமிழகம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சனிப்பெயர்ச்சி விழா அன்று காரைக்கால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகிற 20-ந் தேதி (புதன் கிழமை) சனிப்பெயர்ச்சி விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment