தமிழ் மன்ற நிகழ்ச்சிக்காக 6,218 பள்ளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரம் நிதி தமிழக அரசு உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, December 30, 2023

தமிழ் மன்ற நிகழ்ச்சிக்காக 6,218 பள்ளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரம் நிதி தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ்மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆர்வமும் ஏற்படுத்தும் வகையிலும் தமிழுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 6,218 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தி ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு 3 தமிழ் கூடல் நிகழ்ச்சிகளை நடத்திட ஏதுவாக ஆண்டுதோறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இதற்காக மொத்தம் ரூ.5.60 கோடி நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளின் நினைவாக பள்ளிகளில் செயல்படும் தமிழ் மன்றங்களை ‘முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம்' என பெயர் சூட்டி நிகழ்ச்சிகளை நடத்திட பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment