‘6G NETWORK' தொழில்நுட்ப தேவைகளுக்கேற்ப கல்வி நிறுவனங்கள் இளநிலை, முதுநிலை கல்வியை புதுப்பிக்க வேண்டும் UGC சுற்றறிக்கை! - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, December 4, 2023

‘6G NETWORK' தொழில்நுட்ப தேவைகளுக்கேற்ப கல்வி நிறுவனங்கள் இளநிலை, முதுநிலை கல்வியை புதுப்பிக்க வேண்டும் UGC சுற்றறிக்கை!

‘6G NETWORK' தொழில்நுட்ப தேவைகளுக்கேற்ப கல்வி நிறுவனங்கள் இளநிலை, முதுநிலை கல்வியை புதுப்பிக்க வேண்டும் UGC சுற்றறிக்கை! 
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் புதிய தகவல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 5ஜி அலைவரிசைகள் விரைவான வேகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர 6ஜி நெட்வொர்க்குகள் குறித்த பேச்சுகளும் தொடங்கப்பட்டுவிட்டன. சமீபத்தில் பிரதமர் மோடி 6ஜி தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டு இருந்தார். 6ஜி தொலைநோக்கு திட்டம் குறித்து ஆராய்வதற்கு பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள், கல்வியாளர்கள் அடங்கிய பணிக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. 
இந்த நிலையில் 6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பம் தொடர்பாக, அதற்கேற்றபடி கல்வியின் தரத்தை மேம்படுத்துவது குறித்தும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.), அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அனைத்து கல்லூரி, கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 6ஜி நெட்வொர்க் தகவல் தொழில்நுட்பம் உருவாகி வரும் போக்குகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளவும், 5ஜி நெட்வொர்க் அம்சங்களின் முழுத் திறனை பயன்படுத்தவும், நம்முடைய எதிர்கால ஆராய்ச்சியாளர்கள், என்ஜினீயர்கள் தேவையான திறன்கள், மனநிலையை பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். 
எனவே 6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பம் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்றபடியும் தகவல் தொடர்பு என்ஜினீயரிங்கில் இளநிலை, முதுநிலை கல்வியை புதுப்பித்து, மாற்றி அமைப்பது மிகவும் முக்கியமானது. 6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தீவிர ஈடுபாடு இருந்தால் இந்தியாவை மேம்பட்ட தொலைத் தொடர்பு தொழில்நுட்பங்களில் முன்னணியில் நிறுத்தமுடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment