மாவட்ட நீதிபதி தேர்வு தள்ளிவைப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, December 1, 2023

மாவட்ட நீதிபதி தேர்வு தள்ளிவைப்பு

ஐகோர்ட்டு பதிவாளர் (பணி நியமன தேர்வு) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அன்றைய தினங்களில் மாவட்ட நீதிபதி பதவிக்காக பிரதான எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கனமழையின் காரணமாக இந்த தேர்வு வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறும். இந்த தேர்வு எந்தெந்த தேர்வு மையங்களில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டதோ அதே தேர்வு மையங்களில்தான் நடைபெறும். இதற்காக புதிதாக தேர்வு நுழைவுச்சீட்டு வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment