இந்தியாவில் பள்ளிகளில் கற்பிக்கப்படும் மொழிகள்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, December 11, 2023

இந்தியாவில் பள்ளிகளில் கற்பிக்கப்படும் மொழிகள்!

இந்தியாவில் பள்ளிகளில் கற்பிக்கப்படும் மொழிகள் 
🌺மொழிக்கும் தாய்மொழிக்கும் வேறுபாடு உண்டு. தாய்மொழி என்பது வரையறுக்கப்பட்ட இலக்கணங்களுக்குள் அடங்காதது. சில பகுதிகளில் பேச்சுமொழியாக மட்டும்கூட தாய்மொழி இருக்கும். 

🌺வரிவடிவம் உள்ளவற்றையும் தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றவற்றையும் மொழியாக அங்கீகரிக்கிறார்கள். 1961 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 1,652 தாய்மொழிகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 103 வெளிநாட்டு மொழிகளும் இவற்றுள் அடங்கும். 

🌺மொழியியல் வல்லுனரான ஜார்ஜ் கிரியர்சன் எழுதிய 12 தொகுதிகள் கொண்ட ஒரு நூலின் தரவுகளின்படி, இந்தியாவில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் 179 மொழிகளும் 544 பேச்சுவழக்கு அல்லது வட்டாரமொழிகளும் இருந்திருக்கின்றன. இந்தியாவில் எழுத்து முறை 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகிவிட்டது. 

🌺அமெரிக்காவை மையமாகக் கொண்ட சர்வதேச மொழிகள் அமைப்பான ‘எத்னலாக்' ஆய்வின்படி இந்தியாவில் 120 மொழிகளுக்கு மட்டுமே எழுத்து வடிவம் இருக்கிறது. இதன்படி பார்த்தால் இந்தியாவில் எழுத்து வடிவமற்ற, அருகிவரும் மொழிகளே அதிகம். 

🌺இவற்றில் பெரும்பாலான பேச்சுவழக்கு மொழிகள் ஜம்மு காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் பேசப்படுபவை. ஆரம்பத்தில் சித்திர எழுத்துக்களாக இருந்தவை பிற்காலத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி நிலைத்த வரிவடிவம் பெற்றன. 

இந்தியாவில் 25 வகையான ஆதார எழுத்து வடிவங்கள் உள்ளன. இந்திய அரசியல் அமைப்பின் 8-வது அட்டவணைப்படி 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளில் 69 முதல் 72 மொழிகள் கற்பிக்கப்படுவதாக தரவுகள் ெதரிவிக்கின்றன.

No comments:

Post a Comment